ஸ்டெம்செல்ஸ் இன் டென்டிஸ்ட்ரி - நேஷனல் லெவல் ஹைபிரிட் ஒர்க் ஷாப்
நேஷனல் லெவல் ஹைபிரிட் ஒர்க் ஷாப் ஆன் கிளினிக்கல் அப்பிளிகேஷன் ஆஃப் ஸ்டெம் செல்ஸ் இன் டென்டிஸ்ட்ரி
நிகழ்வின் தலைப்பு : நேஷனல் லெவல் ஹைபிரிட் ஒர்க் ஷாப் ஆன் கிளினிக்கல் அப்பிளிகேஷன் ஆஃப் ஸ்டெம் செல்ஸ் இன் டென்டிஸ்ட்ரி
நிகழ்விடம் : ஜே கே கே என் செந்துராஜா ஹால்
நிகழ்ச்சி நடந்த தேதி : 22.6.2023
தலைமை : ஜே கே கே என் கல்லூரி, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா.
நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை
முன்னிலை : ஜே கே கே என் பல் மருத்துவ் கல்லூரி முதல்வர் டாக்டர் இளஞ்செழியன் MDS, வாய்நோய் குறியியல் துறைத் தலைவர் டாக்டர் தி. தினேஷ்குமார் MDS
வரவேற்புரை : டாக்டர் தி. தினேஷ்குமார் MDS, வாய்நோய் குறியியல் துறைத் தலைவர்
தலைமை உரை : ஜே கே கே என் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, கல்லூரி ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம், மாணவ ஆராய்ச்சிகளில் மாணவர்களின் பங்கு பற்றி உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் உரை : டாக்டர் அவினாஷ் காந்தி, மதர் செல் ரிஜெனரேட்டிவ் சென்டர், திருச்சிராப்பள்ளி, ஸ்டெம் செல் எவ்வாறு பற்களின் உட்பகுதியிலிருந்து எடுக்கலாம் என்பது குறித்து உரையாற்றினார்.
பல்வேறு நோய்களில் அவ்வாறு எடுக்கப்பட்ட தண்டு உயிரணுக்கள் எவ்வாறு பயன்படும் அதன் நிலைப்பாடு பற்றி உரையாற்றினார். பின்னர் பற்களில் தண்டு உயிரணுக்கள் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்று செயல்முறையாக பார்வையாளர்கள் முன் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இந்தியா முழுவதும் இருந்து 790 பேர் முன்பதிவு செய்திருந்தனர். நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
பங்கு பெற்றோர் விவரம் : ஜே.கே.கே. என் மருத்துவக்கல்லூரி முதல்வர், மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மருத்துவப் பயிற்சியாளர்கள், மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் ஜே கே கே என் கல்லூரி குழுமத்தைச் சேர்ந்த நர்சிங், ஏ எச் என், பார்மசி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த சிறப்பு பார்வையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 300 பேர் நேரடியாகவும், பதிவு செய்தவர்கள் யூடியூப் மற்றும் பிக்மேக்கர் பிளாட்பார்ம் மூலமாகவும் இந்தியா முழுவதுமிருந்து பங்குபெற்று பயனடைந்தனர்.
நன்றியுரை: டாக்டர் தினேஷ் குமார் MDS, ஜே.கே.கே.என் வாய் நோய் குறியியல் துறைத் தலைவர் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.