சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிப்பு..!

குமாரபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்- காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

Update: 2024-06-26 13:30 GMT

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, குமாரபாளையத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிப்பு

குமாரபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்- காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

குமாரபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறையினர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆணையின்படி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. கஞ்சா, கஞ்சா சாக்லேட், போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி முதல்வர் ரேணுகா, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர். மேலும் இதே கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

போதை என்பது மனிதனை அடிமையாக்க வேண்டும். அது கல்வி போதை மற்றும் தொழில் சார்ந்த போதைகளாக இருக்க வேண்டும். நம்மை அடிமையாகவும் மூடனாகவும் மற்றும் போதைகளுக்கு எதிராக என்றும் மாணவ மாணவிகள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News