நம்மாழ்வார் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் நம்மாழ்வார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
நம்மாழ்வார் பிறந்த
நாள் விழா
குமாரபாளையத்தில் நம்மாழ்வார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் வீ. மேட்டூர் பகுதியில் இயற்கை அறிவியலாளர்
நம்மாழ்வார் பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் சார்பில் அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி, வினாடி வினா நடத்தப்பட்டு,
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மனநிலை சிகிச்சையாளர் சண்முகசுந்தரம் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றை மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் தன்னார்வலர்கள் ரூபேஷ், தங்கமணி, மற்றும் விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் நம்மாழ்வார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.