நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா!
குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா
குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் திருக்குறள் ஒப்பித்தல், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடத்தப்பட்டு,
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் நாமக்கல் கவிஞர் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார்கள். பூபேஷ் நன்றி உரையாற்றினார். இதில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, நிர்வாகிகள் ரூத், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.