பள்ளிப்பாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-27 13:14 GMT

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பகுதியில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியபடவில்லை பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை -இதுவரை - 202 பேருக்கு தொற்று கண்டறியபட்டுள்ளது!

இதில் -112 நபர்கள் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் - 12 நபர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News