நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்

குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.;

Update: 2024-01-04 12:51 GMT

நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் குமாரபாளையத்தில் நடந்தது.

குமாரபாளையத்தில் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் குமாரபாளையத்தில் நடந்தது. சிறப்பு பார்வையாளராக தலைமை சங்க பொருளார்.காந்தி, பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் நந்தகுமார் மற்றும் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது.

தேர்தலில் ஏகமனதாக மாவட்ட தலைவராக மதிவாணன், செயலாளராக சீனிவாசன், பொருளாளராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் குமாரபாளையம் தங்கராஜ் பள்ளிபாளையம் விக்னேஷ் உள்ளிட்ட 13 மாநில செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் .

வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை தேர்தல் பார்வையாளர் மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் குமரகுருபரன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட தலைவர் உதய சங்கர், பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கினர்.

இந்நிகழ்வில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் பேசியதாவது:-

மாணவ மாணவிகள் தங்களது கல்வி அறிவை மட்டுமின்றி, பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல்வேறு வகையான நூல்களை படிக்க வேண்டும். மாணவ மாணவிகள் உயர் கல்வி பயின்று சமுதாயத்திற்கு பல நற்பணிகள் செய்திட வேண்டும். மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பை முடித்தவுடன் அரசு பணிகளுக்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மாணவ மாணவிகள் தங்களது மனதில் நல்ல எண்ணங்களை பதிய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள் மகேந்திரன், மலர்க்கொடி, மல்லிகா, பிரபு,சீனிவாசன், நடராஜன், மலை ராமநாதன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News