நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலராக மோகன் குமாரபாளையம் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்;
நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். உதவி பொறியாளர் தீனதயாளன் உடல்நலமின்றி விடுப்பில் சென்றுள்ளார். இதனால் திருப்பூர் பறக்கும் படையில் அலுவலராக பணியாற்றிய மோகன், நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலராக குமாரபாளையம் அலுவலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மோகன் கூறுகையில், காவிரி குடிநீரை மாசு படுத்தும் சாய ஆலை நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சில நாட்கள் முன்பு கூட ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர ஈரோடு, சேலம், திருப்பூர், உள்ளிட்ட பகுதியில் இருக்கும் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதி மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்