நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. மாவட்ட அணி பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனம்

BJP News Today Live -நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.அணி பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

Update: 2022-06-21 02:48 GMT

குமாரபாளையத்தை சேர்ந்த வக்கீல் சரவணராஜன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டமைக்கு முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

BJP News Today Live - மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்திரவின்படி, மாநில அமைப்பு பொது செயலர் கேசவ விநாயகன் வழிகாட்டுதல் படியும், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.அணி பிரிவு புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி நியமனம் செய்தார்.

ஒ.பி.சி. அணி, சிறுபான்மை அணி, எஸ்.டி. அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் குமாரபாளையத்தை சேர்ந்த வக்கீல் சரவணராஜன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவராகவும், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவராக கண்ணன்குமாரும், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவராக மல்யுத்த வீரர் இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News