தேர்தல் ஏற்பாடு: பள்ளிபாளையத்தில் நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு

பள்ளிபாளையத்தில் ஓட்டு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2022-02-11 15:30 GMT

பள்ளிபாளையத்தில், ஓட்டு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை,  கலெக்டர் ஷ்ரேயா சிங்  இன்று நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம், படைவீடு, பேரூராட்சிகள், பள்ளிபாளையம் நகராட்சி ஆகிய இடங்களில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இன்று  நேரில் ஆய்வு செய்தார்.

இதில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள அழியாத மை, ஓட்டுப்பதிவு எழுத்து பொருட்கள், பல்வேறு பயன்பாட்டிற்கான உறைகள், ரப்பர் ஸ்டாம்புகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பட்டியலில் உள்ளபடி சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.

சின்னங்கள் பொருத்தப்படுவதையும், பாதுகாப்பு அறையில் ஆயுதமேந்திய போலீசார் பணியில் உள்ளதையும், முக்கியமான இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இருபத்தையும் ஆய்வு செய்தார். இதில் பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News