குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-09-10 16:00 GMT

பள்ளிபாளையம் காவல் நிலையம். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே படைவீடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43, லாரி ஓட்டுனர். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் படைவீடு, இந்திரா நகர் பகுதியில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வெப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.

அப்போது, குடிபோதையில் தள்ளாடியபடி சாலையை கடந்து வந்ததாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார் எனு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டு வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News