போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கிய இஸ்லாமியர்கள்
குமாரபாளையம் போலீசாருக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்கினர்.;
குமாரபாளையம் போலீசாருக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்கினர்.
குமாரபாளையம் போலீசாருக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்கினர்.
ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாகும். ஏப்.11ல் ரம்ஜான் பண்டிகை வரவுள்ளதால், இஸ்லாமியர்கள் தற்போது நோன்பிருந்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, அனைத்து சமூக மக்களுக்கும், நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.
நேற்று குமாரபாளையம் போலீசாருக்கு, இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி வழங்கினர். இஸ்லாமியர்களுக்கு எஸ்.ஐ.க்கள் கங்காதரன், அன்பில்ராஜ், தங்கவடிவேல்,எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், போலீஸ் ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட மகளிர் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
போலீசார் அறிவுறுத்தல்
குமாரபாளையத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்று துன்பப்படும் நபர்கள், குமாரபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்க வேண்டி, இன்ஸ்பெக்டர் தவமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
குமாரபாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாராவது, வட்டிக்கு பணம் பெற்றும், வட்டி செலுத்த முடியாமல் துன்பப்படுவதாக இருந்தாலும், ஆன்லைன் மூலம் பணம் பெற்று துன்பப்பட்டு கொண்டிருந்தாலும், அல்லது வேறு வகையில் அதிக வட்டிக்கு பணம் பெற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் மற்றும் எவ்வித பிரச்சனையாக இருந்தாலும், உடனே குமாரபாளையம் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.