குமாரபாளையத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update: 2021-12-08 10:00 GMT

குமாரபாளையம்,  ஜே.கே.கே. சுந்தரம் நகர் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை காண வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் நகரில்,  ஸ்ரீவள்ளி  தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நவ. 21ல் யாகசாலை கால்கோள் விழா, டிச. 2ல் முளைப்பாரி இடுதல், டிச. 5ல் காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 6, 7 இரு தினங்களில் காலை மற்றும் மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் நகர் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜையில் வைத்து இரு நாட்களாக பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்ட புனித தீர்த்தம்,  கோபுர கலசத்தின் மீது சிவாச்சாரியர்கள் ஊற்றினார்கள். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவிற்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. . இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில்  நீர்மோர் வழங்கப்பட்டது. மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா, சுஜாதா , நந்தகுமார், கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News