பழனியில் இருந்து 50 மாட்டு வண்டிகளில் திரும்பிய முருக பக்தர்கள்
பழனியில் இருந்து குமாரபாளையம் அருகே உள்ள இடையப்பட்டிக்கு, 50 மாட்டு வண்டிகளில் முருக பக்தர்கள் வந்தனர்.;
ஆண்டுதோறும் முருக பக்தர்கள் தை மாதத்தில் பல பகுதிகளில் இருந்து பழனி சென்று முருகனை வழிபட்டு வருவார்கள். பாத யாத்திரையாக சென்று வழிபடுவதும் உண்டு. இந்த வகையில் இடைப்பாடி பகுதியில் இருந்து பழனிக்கு சென்ற முருக பக்தர்கள் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் குமாரபாளையம் வழியாக இடைப்பாடி சென்றனர். வழி நெடுக இத்தனை மாட்டு வண்டிகள் செல்வதை கண்டு பொதுமக்கள் பிரமித்து வேடிக்கை பார்த்தனர்.