முரசொலி மாறன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் திமுக சார்பில் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-08-17 15:15 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா, முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமையில் குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாறனின் வெற்றிகள் எனும் தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள், முககவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், பிரகாஷ், முத்து, வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News