குமாரபாளையத்தில் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு
குமாரபாளையத்தில், நகராட்சிகளுக்கான மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.;
குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் தார் சாலை, வடிகால் கட்டுமான பணிகளை நகராட்சி மண்டல இயக்குனர் சுல்தானா, மண்டல பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
குமாரபாளையத்தில், 33 வார்டுகளில் அதிக குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் போதிய வடிகால், சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக பல பகுதிகளில் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து, பொதுமக்கள் புகார் கொடுத்ததின் பேரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு குமாரபாளையம் நகராட்சிக்கு 246 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி வடிகால், சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி மண்டல இயக்குனர் சுல்தானா, மண்டல பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். ராஜராஜன் நகர், காவேரி நகர், அம்மன் நகர், நேதாஜி நகர் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலைகள் மற்றும் வடிகால் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மை குறித்து கேட்டறிந்தனர்.