நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.;
நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் லலித் ஆதித்ய நீலம் நேரில் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் , கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அங்கு அமையப்பெற்ற நுண் உரை செயலாக்க மையத்தை ஆய்வு செய்து அறிவுரை கூறினார். நகராட்சி அலுவலகத்தில் இருந்தவாறு, சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சிகளில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பணிகளின் முன்னேற்றம் குறித்து காணொளி காட்சி மூலம் ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஓவர்சீர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.