துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை

குமாரபாளையம் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை வழங்கினார்.;

Update: 2024-09-14 15:00 GMT

குமாரபாளையம் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அறிவுரை வழங்கினார்.

துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை

குமாரபாளையம் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சில மாதங்களாக நடந்த நகரமன்ற கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகள் அகற்ற வருவது இல்லை, என புகார் கூறினார்கள். நேற்று காலை, நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் கமிஷனர் குமரன், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நேரில் சென்று, துப்புரவு பணியாளர்களை அழைத்து அறிவுரை கூறினார்கள்.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறியதாவது:

ஒவ்வொரு வார்டிலும் தூய்மை பணிகள் செய்வது இல்லை என புகார் வந்து கொண்டுள்ளது. உங்கள் பணிகளை நீங்கள் சரியாக செய்தால்தான் நகராட்சி நிர்வாகத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும், ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தூய்மை பணிகளை செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், வார்டு மேற்பார்வையாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Similar News