குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.;
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 83 கடைகளில் அதிக கடையினர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சில நாட்கள் முன்பு நகராட்சி அதிகாரிகள் அனைத்து கடையினரிடம் நேரில் சென்று, குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் கொடுத்து வாடகை செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் அதனையும் பொருட்படுத்தாமல் வாடகை செலுத்தாமல் இருந்தனர். அதனால் நகராட்சிக்கு சொந்தமான 9 கடைகள் சீல் வைக்கப்பட்டன. வாடகை செலுத்தாத கடைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொறியாளர் ராஜேந்திரன், மேலாளர் சண்முகம், ஆர்.ஐ. கோபால், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.