நகராட்சி புதிய பொறியாளர் பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சியின் புதிய பொறியாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2021-08-07 16:00 GMT

குமாரபாளையம் நகராட்சி புதிய பொறியாளர் ராஜேந்திரன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.

குமாரபாளையம் நகராட்சியின் பொறியாளராக இருந்த சுகுமார், நாமக்கல் நகராட்சிக்கு பணியிட மாறுதலானார். நாமக்கல்லிருந்து குமாரபாளையம் நகராட்சி பொறியாளராக ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நகர அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். குமாரபாளையம் நீரேற்று நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவைகளை புதிய பொறியாளராக பொறுப்பேற்ற ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பார்வையிட்டனர்.


Tags:    

Similar News