குமாரபாளையத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி சேர்மன்

குமாரபாளையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நகராட்சி சேர்மன் பதிலளித்தார்.;

Update: 2022-05-22 12:30 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மனுக்கள் பெற்றார்.

குமாரபாளையம் நகராட்சி ஜே.கே.கே. திருமண மண்டபத்தில் நகராட்சி சேர்மன், பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வார்டுகளில் உள்ள குறைபாடுகள் குறித்த புகார்கள், மற்றும் கேள்விகளுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பதில் கூறினார்.

இதில் பங்கேற்ற பல்வேறு வார்டு பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகவும் சேர்மனிடம் கொடுத்தனர். வடிகால், குப்பை கிடங்கு அமைத்தல், நாய்கள் தொல்லை, சாயநீர், குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர், காவிரி ஆற்றில் கலப்பதை தடுத்தல், உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சேர்மன், விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, நந்தினிதேவி, செல்வி, புஷ்பா, வள்ளி, மகேஸ்வரி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News