முனியப்பன் கோயில் திருவிழா கோலாகலம் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்!

குமாரபாளையம் அருகே முனியப்பன் கோயில் திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2025-01-04 12:45 GMT

முனியப்பன் கோயில் திருவிழா கோலாகலம் - பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்

குமாரபாளையம் அருகே முனியப்பன் கோயில் திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் செங்கமாமுனியப்பன் கோவில் திருவிழா டிச. 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன. 2ல் உற்சவருக்கு பெரும்பூஜை, ஜன. 3ல் காவிரி புனித தீர்த்தம் கொண்டு வருதல் நடந்தது. நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வணங்கினர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அருகே முனியப்பன் கோயில் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பன் கோயில் திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குமாரபாளையம் அருகே முனியப்பன் கோயில் திருவிழாவில் அதிக அளவிலான கரும்பு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News