நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..!
குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.;
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் (பொ) கணேசன் தலைமையில் நடந்தது.
இதில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, கால்நடைகள் பாதுகாத்தல் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதைப்போன்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மூலமாக சுகாதாரம், தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, தனி நபர் சுத்தம் போன்ற பல்வேறு சுகாதார கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. மக்கள் இந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அதேபோல மக்கள் நிகழ்ச்சியை ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.