பள்ளிபாளையம் ரயில்வே சாலையில் தேங்கும் தண்ணீர்- தவிக்கும் வாகனஓட்டிகள்

பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

Update: 2021-07-19 16:00 GMT

ரயில்வே நுழைவுச்சாலையில், குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரயில்வே நுழைவுபாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிபாளையத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ரயில்வே நுழைவு பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாததால் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே, போர்க்கால அடிப்படையில், மழைநீர் தேங்குவதை கட்டுப்படுத்தி விபத்தில்லா வாகன பயணம் ஏற்படுத்தி தருமாறு, சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் நெடுஞ்சாலை துறைக்கும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News