பவானியில் சாலையின் நடுவே பெரிய பள்ளம்; வாகனயோட்டிகளுக்கு விபத்து அபாயம்

பவானி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.;

Update: 2021-08-14 16:30 GMT

பவானியில் அந்தியூர், மேட்டூர் பிரிவு சாலை பகுதியில் போலீஸ் குடை அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்.

பவானியில் அந்தியூர், மேட்டூர் பிரிவு சாலை பகுதியில் போலீஸ் குடை அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. டூவீலர்கள், லாரி, டெம்போ, கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் செல்லும் சாலை என்பதால் இந்த பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News