நகரமன்ற தேர்தலில் தாய்-மகன் வெற்றி, அக்கா - தங்கை வெற்றி
குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் தாய்- மகன் மற்றும் அக்கா- தங்கை ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்;
நகரமன்ற தேர்தலில் போட்டியிட்ட தாயும், மகனும் அக்காவும் தங்கையும் வெற்றி பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் தாய், மகன் மற்றும்அக்காள், தங்கை வெற்றி பெற்றுள்ளனர். குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிட்ட நிலையில், தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9, எனும் விதத்தில் வெற்றி பெற்றனர்.
இதில் 4, 2 வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் புஷ்பா, கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் அக்கா, தங்கை ஆவர்.
இதே போல் 29,30வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் தனலட்சுமி, பாலசுப்ரமணி ஆகிய இருவரும் அம்மா, மகன் ஆவார்கள். சுயேச்சை வேட்பாளர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பதில்தான் தலைவர் தேர்தல் இருந்து வருகிறது.