ஒரு வயது குழந்தையின் தாய் மாயம்
குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தையின் தாயார் மாயமானார்.
ஒரு வயது குழந்தையின் தாய் மாயம்
குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தையின் தாயார் மாயமானார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ், 26. தனியார் மில் சூப்பர்வைசர். இவரது மனைவி பிரபா, 22. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நான்கு வருடம் முன்பு இவர்களது திருமணம் நடந்தது. நவ. 14ல் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலை 03:50 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்ற பிரபா, இது வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.