அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின கோலாகலம்..!

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம் மற்றும் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2024-02-22 06:13 GMT

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் மற்றும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா நடந்தது

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக தாய்மொழி  தினம் மற்றும் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி  னம் மற்றும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ், தலைமையாசிரியை செல்வி தலைமையில் நடந்தது.

உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, புத்தங்கங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சண்முகம், ஆசிரியர்கள் குமார், முத்து, அருள், பார்வதி, சந்தானலட்சுமி, அம்சா, கீதா மாதேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

உ.வே.சாமிநாதையர் உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் கருதப்படுகிறார்கள்.

உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார். 

Tags:    

Similar News