குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் தாய், மகள் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை, வாத்தியார் தோட்டம் பகுதியில் ஆர்த்தி மஞ்சுளா என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் புவன ஜென்சி, 42. இவரது மகள் கிப்டி யசுரி, 6.
இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 15ம் தேதி மதியம் 04:00 மணி முதல் காணவில்லை என கூறபடுகிறது. இது குறித்து புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் காணாமல் போன தாய், மற்றும் மகளை தேடி வருகின்றனர்.