குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2023-12-07 16:00 GMT

குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் பல நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோம்பு பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அனைத்து வார்டுகளிலும் கொசுத்தொல்லைகள் அதிகரித்து வருவதால், அனைத்து கவுன்சிலர்களும் நகரமன்ற கூட்டத்தில் பேசும் போது, அனைத்து வார்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உத்தரவுப்படி, அனைத்து வார்டுகள், மார்க்கெட், பூங்கா, வாரச்சந்தை வளாகம் ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் சென்று, நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வருகின்றனர்.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 288 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் ரத்த கொதிப்பு, ரத்த வகை கண்டறிதல், ஈ.சி.ஜி, சர்க்கரை அளவு பார்த்தல், கண் பார்வை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News