ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 25 க்கும் மேற்பட்டோர் காயம்
குமாரபாளையம் அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 25 க்கும் மேற்பட்டோர் காயம் - குமாரபாளையம் அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இருந்து திருப்பதி வரை செல்லும் தனியார் ஆம்னி பேருந்து நேற்றுமுந்தினம் இரவு 10 மணி அளவில் தொண்டாமுத்தூர் பகுதியில் இருந்து புறப்பட்டு, சுமார் 26 பயணிகளுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை கோபியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற ஓட்டுநர் வாகனத்தை ஒட்டியதாக தெரிகிறது. அப்பொழுது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 26 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். இருப்பினும் சண்முக வடிவு என்ற 60 வயது மூதாட்டி தலையில் பலத்த காயம் அடைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று விட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இவற்றின் காரணமாக சுமார் 4 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தை சர்விஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால் மிகுந்த வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்த குமாரபாளையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.