குமாரபாளையம் அரசு மாணவர் விடுதியில் மொபைல் போன்கள் திருட்டு

குமாரபாளையம் அரசு மாணவர் விடுதியில் 6 மொபைல் போன்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.;

Update: 2022-01-01 07:15 GMT

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில்,  அரசினர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 100 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 07:00 மணியளவில் மாணவர்கள் எழுந்த போது, பலரும் தனது மொபைல் போனை காணவில்லை என்று கூற, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி விடுதி காப்பாளர் நல்லுசாமி கூறுகையில், விடுதி அருகே உள்ள முனியப்பன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. பல ஊர்களில் இருந்து கூட்டம் அதிகம் கூடியுள்ளனர். சென்ற வருடம் இதே போல் மொபைல் போன் உள்ளிட்ட பல பொருட்கள் காணமல் போனது. எச்சரிக்கையாக இருங்கள் என்று மாணவர்களிடம் அறிவுறித்தினேன். எனினும், மாணவர்களின் மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விடுதி சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News