மாணவர் சமுதாயத்திற்கு அலைபேசி அறிவைவளர்க்கிறதா? அடிமைப்படுத்துகிறதா?

மாணவர் சமுதாயத்திற்கு அலைபேசி அறிவைவளர்க்கிறதா? அடிமைப்படுத்துகிறதா?

Update: 2024-03-23 06:40 GMT

கோப்புப்படம் 

ஜே. கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் - அறிக்கை


நிகழ்வின் தலைப்பு:

மாணவர் சமுதாயத்திற்கு அலைபேசி அறிவைவளர்க்கிறதா? அடிமைப்படுத்துகிறதா?

நிகழ்விடம்: செந்தூராஜா அரங்கம், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நிகழ்ச்சி நடைப்பெற்ற தேதி: மார்ச் 21, 2024.

நிகழ்ச்சி நடந்த நேரம்: காலை 10.45மணி, வியாழக்கிழமை

முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அதிபர் மற்றும் முதல்வர் முன்னிலையில்,


வரவேற்புரை: முனைவர்.ஒ.ப.கருப்புசாமி, தமிழ்த்துறைத் தலைவர், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்கினார்.

அறிமுகவுரை: இரா.மஞ்சுளாதேவி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 அறிமுகவுரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்புரை: முனைவர்.ஸ்ரீ.உமா பட்டிமன்ற நிகழ்வைப் பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

பங்கு பெற்றோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.


நிகழ்வின் முக்கியத்துவம்: இன்றைய நவீன உலகில் அலைபேசி என்பது தொலைதொடர்பு சாதனங்களில் முதன்மையான இடத்தை பெற்று வருகின்றது. அலைபேசி மாணவர்களின் அறிவை வளர்க்கிறதா? அடிமைப்படுத்துகிறதா? என்பதைப் பற்றி பட்டிமன்ற பேச்சாளர்கள் எடுத்துரைத்தார்கள். தொலைபேசி எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் எதற்கெல்லாம் உபயோகிக்க வேண்டும் போன்ற பல்வேறு செய்திகள் எடுத்துரைக்கப்பட்டது.

வளர்ச்சி இலக்கு:

இப்பட்டிமன்ற நிகழ்வின் வாயிலாக மாணவர்கள் அலைபேசியால் அறிவை வளர்த்துக்கொள்கிறார்களா அல்லது அடிமைப் படுத்தபடுகிறார்களா என்பதை அறிந்து கொண்டனர். தொலைபேசி மாணவர்களுக்கு நன்மையா தீமையா என்பது பற்றியும் சமூகங்களில் எந்த அளவிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டனர்.

நன்றியுரை:

" பட்டிமன்ற நிகழ்ச்சியின் இறுதியில் அ.குமார், தமிழ்த்துறை, உதவி பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News