குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ தங்கமணி
குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி நன்றி தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாநிலம் முழுதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், ஊரடங்கு அமலில் இருந்ததாலும், எம்.எல்.ஏ,. தங்கமணி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை, தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு, கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், நல்லாம்பாளையம், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் வழி நெடுக ஆரத்தி எடுத்து, அவரை வரவேற்றனர். தங்கள் குறைகளை பலரும் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். அதனை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். டூவீலர்களில் அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டியவாறு தொண்டர்கள், அவரை பின்தொடர்ந்து சென்றனர்.