அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க எம்.எல்.ஏ 2 லட்சம் நிதி உதவி

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க சட்டமன்ற உறுப்பினர் 2 லட்சம் நிதி உதவி

Update: 2021-05-17 18:12 GMT

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் பசியால் வாட கூடாது என்ற நோக்கத்துடன் பள்ளிபாளையம் நகராட்சி அம்மா உணவகத்தின் இன்று முதல் வழங்கப்படும் உணவுகளுக்கு  காலை மற்றும் மதியம் உணவுக்கு ஆகும் செலவுகளை தாமே ஏற்றுக் கொள்வதாக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி தங்கமணி  நேற்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

அதன்படி இன்று பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் உணவுக்கான செலவுத் தொகையாக இரண்டு லட்ச ரூபாய் நிதியினை வழங்கினார். அதன்படி இன்று மதியம் முதல் அம்மா உணவகத்தில் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News