கடும் போதைக்கு சரக்குடன் மிக்ஸிங், 'பலே கில்லாடி கைது' - போலீசார் அதிர்ச்சி!!
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் காலை தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நேற்று காலை 7 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை அருவங்காடு பகுதியில் முட்புதரில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பது தெரிய வந்தது.
அங்கு நேரில் சென்று விசாரித்ததில் மாதேஸ்வரன் (52) என்பவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மூன்று பாட்டில்களின் மூடி திறந்து இருந்ததுடன், துர்நாற்றம் வீசியது. இதுபற்றி விசாரணை செய்ததில் அதிக போதை ஏற்பட, பாட்டிலுக்குள் ஊமத்தம் இலை சாறு கலந்திருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.