புதுப்பிக்கப்பட்ட அண்ணா சமுதாய படிப்பகத்தை திறந்து வைத்த அமைச்சர்
குமாரபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சமுதாய படிப்பகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.;
சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சமுதாய படிப்பகம் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் மதிவேந்தன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நூலகம் புதுப்பிக்கவும், புதிய புத்தகங்களை வாங்கி கொடுத்தவர்களையும் சால்வை அணிவித்து அமைச்சர் கவுரவப்படுத்தினார்.
சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் மாவட்ட துணை செயற் சேகரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
நிர்வாகிகள் மாணிக்கம், இளவரசு, ஜகன்நாதன், கதிரவன் சேகர், அன்பரசு, அன்பழகன், மீனாட்சிசுந்தரம், ரவி, ராஜ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.