டூவீலரில் சென்றவர் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்றவர் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார்.;
டூவீலரில் சென்றவர் நிலை தடுமாறி
மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்றவர் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஆனந்த், 42. ரியல் எஸ்டேட். இவர் நேற்றுமுன்தினம் 08:15 மணியளவில், தன்வந்திரி மருத்துவமனை எதிரே செல்லும் குட்டிக்கிணத்தூர் பகுதியில், ஆனந்த், தனது ஹீரோ பேஷன் புரோ வாகனத்தில் சென்ற போது, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி, பிரதீபா, 35, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.