குமாரபாளையம் நகராட்சி வாரச்சந்தையில் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம்
குமாரபாளையம் நகராட்சி வாரச்சந்தையில் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.;
குமாரபாளையம் நகராட்சி வாரச்சந்தையில் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி வாரச்சந்தையில் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.
வாரந்தோறும் குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் சந்தை கூடுவது வழக்கம். பல மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சந்தை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது.
தற்பாேது தளர்வுகள் அறிவித்த நிலையில் கடந்த இரு வாரங்களாக இந்த சந்தை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. சந்தை வளாகத்தில் நகராட்சி பணியாளர்கள் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்தனர்.
வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டன.