குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்
குமாரபாளையத்தில் நள்ளிரவு மழை மற்றும் நாள் முழுவதும் வான் மேக மூட்டம் மக்களை மகிழ்வித்தது.;
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இதனால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், வயதானாவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் பெய்த சாரல் மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் வானம் இருந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெயில் இல்லாததால் நேற்று நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் பெரும்பாலான பள்ளிகளில் வெட்ட வெளியில் நடைபெற்றன. பொதுமக்களும் வெயில் அச்சமின்றி சாலையில் சென்றதை காண முடிந்தது.