வாகன ஓட்டுனர்களுக்கு நள்ளிரவில் டீ கொடுத்த பொதுநல அமைப்பினர்
குமாரபாளையம் அருகே வாகன ஓட்டுனர்களுக்கு நள்ளிரவில் பொதுநல அமைப்பினர் டீ கொடுத்தனர்.
லாரி, டெம்போ உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு விபத்துக்கள் தடுக்கும் வகையில் இந்தியன் கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் டீ வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கியது. சேலம் கோவை புறவழிச்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டுனர்களுக்கு டீ வழங்கினர். மேலும் இரவு நேர பணியாற்றும் போலீசாருக்கும் டீ வழங்கப்பட்டது. மாநில தலைவர் சீனிவாசன், நாமக்கல் மாவட்ட தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.