குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு
குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.;
பைல் படம்.
குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
குமாரபாளையம் நாராயனனகரில் வசிப்பவர் தவசி, 55. கூலித்தொழிலாளி. நேற்று இரவு 08:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் இவர் நடந்து சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.