குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு
குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
குமாரபாளையம் காவல் நிலையம்.
குமாரபாளையம் பெராந்தார்காடு பகுதியில் வசித்து வந்தவர் சதீஸ்குமார், 38. விசைத்தறி கூலி. இவருக்கு நதியா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஸ்குமார், ஜன. 8ல் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 06:00 மணியளவில் உயிரிழந்தார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.