குமாரபாளையத்தில் விபத்து அபாயத்தில் மனநலம் பாதித்தவர்

குமாரபாளையத்தில் மனநலம் பாதித்த ஒருவர் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் சாலையில் இடையூறாக இருந்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-02-18 03:26 GMT

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மனநலம் பாதித்தவர் விபத்து அபாயத்தில் இருந்து வருகிறார்.

குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க, மன நலம் பாதித்த ஆண் ஒருவர் சாலையோரம் அமர்வதும், சாலையை அடிக்கடி கடப்பதுமாக இருந்து வருகிறார்.

வாகனங்கள் வேகமாக செல்லும் பாதையில் இதுபோல் இவர் இருந்து வருவது விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இவரை காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News