தீர்த்தக்குட ஊர்வலத்தில் கைகலப்பு: சமாதான பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை
குமாரபாளையத்தில் தீர்த்தக்குட ஊர்வலத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.;
குமாரபாளையத்தில் தீர்த்தக்குட ஊர்வலத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கோட்டைமேடு ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் கூறுகையில், குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் காவேரி ஆற்றிலிருந்து நேற்று முன்தினம் இரவு 08:00 மணியளவில் நடைபெற்றது.
இதில் பேண்டு வாத்தியங்களின் வாசிப்புக்கு ஏற்ப இளைஞர்கள் சிலர் ஆடியவாறு வந்தனர். அப்போது எதிர்பாராமல் மோதியதற்காக ஒரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மீது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த இளைஞர்ர் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு சமுதாயத்தினர், அடித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்திட வேண்டி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். குமாரபாளையத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருவதாலும், நகரமன்ற தலைவர், துணை தலைவர் தேர்தல் நாளை (இன்று) நடக்கவுள்ளதால் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் செல்ல வேண்டும் என்பதாலும், இரு நாட்களுக்கு பின் இது பற்றி பேசி வழக்குபதிவு செய்து கொள்ளலாம் என போலீசார் கூறினர்.
மேலும் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் தீர்த்தக்குட ஊர்வல நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு போலீசார் அதிகளவில் நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.