முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மருத்துவ முகாம் நடத்தபட்டது.;

Update: 2022-06-03 15:15 GMT

அவை தலைவர் ஜெகநாதன் தலைமையில் எதிர்மேடு ஆதரவற்றோர் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதியோர்களுக்கு பெட்சீட், துண்டு வழங்கப்பட்டது.

குமாரபாளையம் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நகர தி.மு.க. செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. பள்ளிபாளையம் சாலையில் மலர்களால் அலங்கரித்து வைக்கபட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். பல வார்டுகளில் கட்சிக்கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஜி.ஹெச்.ல் உள் நோயாளிகளுக்கு பால், பழம், பன் வழங்கப்பட்டது. 4,12,32 வார்டுகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கபட்டது. நகர தி.மு.க. அலுவலகத்தில் அவை தலைவர் ஜெகநாதன் தனியார் கல்லூரி சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். கவுரி தியேட்டர் அருகே ஜல்லிக்கட்டு வினோத்குமார் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு, கொடியேற்றப்பட்டது. பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது. எதிர்மேடு ஆதரவற்றோர் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதியோர்களுக்கு பெட்சீட், துண்டு வழங்கப்பட்டதுடன் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

துணை சேர்மன் வெங்கடேசன், நகர பொருளர் குட்லக் செல்வம், நகர துணை செயலர் ரவி, கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், கதிரவன்சேகர், நிர்வாகிகள் ராமசாமி, விஸ்வநாதன், செல்வகணேசன், புவனேஷ், பிரேம், உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News