குமாரபாளையத்தில் புதிய மார்க்கெட் அமைக்க அளவிடும் பணி: சேர்மன் துவக்கி வைப்பு

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்க அளவீடு பணிகள் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டுள்ளன.

Update: 2022-05-12 13:15 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தினசரி மார்க்கெட் அமைக்க நகராட்சி அதிகாரிகள் அளவீடு பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் துவக்கினர். 

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்க அளவீடு பணிகள் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் இடம் தேர்வு செய்யப்படுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சில நாட்கள் முன்பு சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பெரும்பாலோர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தற்போதுள்ள கடைகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு, குறிப்பிடும் இடத்தில் நிறுவப்படும் என்றும், புதிய கட்டுமான பணிகள் நிறைவு பெற ஒரு வருட காலம் ஆகும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று எடப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் தினசரி மார்க்கெட் அமைக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, கடைகள் அமைக்க சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகளால் அளவீடு பணி துவங்கியது.

Tags:    

Similar News