குமாரபாளையத்தில் ம.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா
குமாரபாளையத்தில் ம.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் எம்.பி. கணேசமூர்த்தி பங்கேற்று கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் ம.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா நகர செயலர் நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி பங்கேற்று கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாவட்ட செயலர் குருசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது. நகர செயலர் நீலகண்டன் கூறியதாவது:
குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும், வாரம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் வளர்சிக்கு வலு சேர்க்கப்படும். உள்ளாட்சி தேர்தலின் ம.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுதல், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட செயலர் முருகன், மாநில இளைஞர் அணி துணை தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.