குமாரபாளையத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மே தின விழாவை தொழிற்சங்கத்தினர் சிறப்பா கொண்டாடினார்கள்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் ஜே.கே.கே. வீதியில் செல்வராஜ் தலைமையில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. நிர்வாகி மாரியம்மாள், சரஸ்வதி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சித்ரா, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் நகரம் முழுதும் கொண்டாடப்பட்டது. நகர குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், காளியப்பன், சரவணன், ஆறுமுகம், சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பல இடங்களில் கொடியேற்றி வைத்தனர்.
ஏ.ஐ.சி.சி.டி.யூ சார்பில் மாவட்ட செயலர் சுப்ரமணி தலைமையில் கொடியேற்று விழா நகரின் பல பகுதியில் நடைபெற்றது. சி.பி.ஐ. சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் கொடியேற்று விழா அனைத்து வார்டுகளில் நடைபெற்றது.