மாவட்ட அளவிலான இலக்கிய போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி முதலிடம் பெற்று சாதனை

இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, குமாரபாளையம், வேமன் காட்டு வலசு, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெகதீஸ்வரிக்கு, . மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.;

Update: 2025-03-17 16:30 GMT

மாவட்ட அளவிலான இலக்கிய போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி முதலிடம் பெற்று சாதனை

இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, குமாரபாளையம், வேமன் காட்டு வலசு, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெகதீஸ்வரிக்கு, . மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற வேமன் காட்டு வலசு, அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெகதீஸ்வரிக்கு, நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மாணவிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். . மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், தேர்வுத்துறை உதவி இயக்குனர் சிவகாமி மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். பரிசு பெற்ற மாணவிக்கு, தலைமை ஆசிரியை செல்வி, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

படவிளக்கம் : 

Similar News