மழைக்காலத்தை ஒட்டி மாஸ் கிளீனிங்: குமாரபாளையம் நகராட்சி சுறுசுறுப்பு

மழைக்கால நோய்களை தடுக்க, குமாரபாளையத்தில் துப்புரவு பணியாளர்கள் மூலம் மாஸ் கிளீன் செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-11-20 04:45 GMT

குமாரபாளையம் நகர தெருக்களில் மாஸ் கிளினிங் நடைபெற்றது. 

மழைக்காலம் என்பதால், பல்வேறு நோய்கள், காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதார மற்றும் தூய்மைப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழை பெய்வதையொட்டி மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அறிவுரை பேரில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் மாஸ் கிளீன் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 120 பணியாளர்கள், பொக்லைன் இயந்திரங்கள், கடாச்சி இயந்திரங்கள் உதவியுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப்பணி செய்யாதிருந்த கோம்பு பள்ளத்தில்,  இரண்டு கி.மீ. தூரம், நான்கு அடி ஆழத்திற்கு தூர் வாரப்பட்டது. குமாரபாளையம் நகராட்சியில் அதிக குப்பைகள் எங்கும் தேங்காதிருக்கும் வகையில், அவ்வப்போது மாஸ் கிளீன் செய்யப்பட்டு குப்பை இல்லாத நகராட்சியாக திகழும் வகையில்  நகராட்சி தூய்மை பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள குப்பைகளை மாஸ் கிளீன் எனும் வகையில் முழுவதுமாக அகற்றப்பட்டது.

மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாதிருக்க அனைத்து வார்டுகளிலும்  தூய்மை பணியாளர்கள், டெங்கு, மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் வீதி வீதியாகவும், ஒவ்வொரு வீடு, வீடாகவும்  சென்று குப்பைகளை தேங்க விடக்கூடாது. தண்ணீரை பிடித்து வைத்து பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தினமும் தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும்.  கிணறுகளில் மருந்து தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். அதே போல்  நகரில் எங்கும் குப்பைகள் தேங்காமல் இருக்க மாஸ் கிளீன் செய்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News